தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில், தென்னை வளர்ச்சிக்கான திட்டங்கள், கரும்புக்கான ஊக்கத்தொகை, டெல்டா பகுதிகளில் சேமிப்பு கிடங்குகள், நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வழங்குதல், மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டு திட்டம், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பொருளீட்டு கடன், ஆதிதிராவிடர் பழங்குடியினர் விவசாயிகளுக்கு கூடுதல் மானியம், முதலமைச்சரின் ஆயிரம் உழவர் சேவை மையங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.