திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.2.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் வேளாண்மை அதிகாரிகள் கலந்துகொண்டு சம்பந்தப்பட்ட நீர்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண்மை, விவசாய இடுபொருட்கள், மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். விவசாயப் பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினைநல்லமுறையில்பயன்படுத்திக்கொள்ளுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.