அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நூல் கூட்டத்தில், தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையினை உயர்த்தி வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய விவசாய சங்கத்தினர் தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு ரூபாய் மூன்று மட்டுமே ஊக்கத் தொகையாக வழங்கி வருகின்றது.
இந்த தொகை பால் உற்பத்தியாளர்கள், கால்நடைகளுக்கு தீவனம் வாங்கும் செலவிற்கு கூட பத்தாது. எனவே
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் விலைவாசி உயர்வினை கருத்தில் கொண்டும், கால்நடைகள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் பால் அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் அரசு ஊக்கத் தொகையினை பத்து ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.