தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி பகுதியில் தாளடி சாகுபடிக்காக நாற்று நடும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி பணிகள் நடப்பது வழக்கம்.. இந்த ஆண்டு மேட்டூரில் தண்ணீர் இல்லாததால் காலதாமதமாக திறக்கப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, வல்லம், கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி உட்பட பகுதிகளில் ஆற்றுப் பாசனம் வாயிலாக சாகுபடி பணிகள் மேற்கொள்ளும் விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவில்லை.பம்ப்செட் வசதி உள்ள விவசாயிகள் மட்டும் குறுவை சாகுபடியை மேற்கொண்டு அறுவடை பணிகளை முடித்தனர்.
மேலும் 8: கரம்பை உட்பட பகுதிகளில் விவசாயிகள் ஒருபோக சம்பா சாகுபடியை தற்போது மேற்கொண்டு வரும் நிலையில், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதியில் விவசாயிகள் தாளடி சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது வாய்க்கால்களில் தண்ணீர் வருகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் வயலை உழுது நாற்று நடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ஒரு சில பகுதிகளில் இயந்திரம் மூலம் நடவு நடப்பட்டாலும் ஆலக்குடி பகுதியில் விவசாய பெண் தொழிலாளர்கள் நாற்று நடும் பணிகளில் மும்முர மாக ஈடுபட்டுள்ளனர்.