தேனியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த நடிகர் சசிகுமார் உடன் செல்பி எடுப்பதற்காக அவரை சூழ்ந்த ரசிகர்கள்
ஒரு ஊருக்கு கோவில் அவசியம் என்பது போல் பள்ளியும் மிக மிக அவசியம் என தேனியில் நடைபெற்ற அரசு பள்ளி நன்கொடையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் சசிகுமார் பேச்சு…
தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியில் செயல்படும் அரசு கள்ளர் நடுநிலைபள்ளிக்கு நன்கொடை வழங்கிய நபர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி பொதுப்பள்ளி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் சசிகுமார் கலந்துகொண்டு அரசு பள்ளிக்கு நன்கொடை வழங்கிய பள்ளியின் முன்னாள் மாணவர்கள், அப்பகுதி பொதுமக்கள் என சுமார் 80க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கி கௌரவித்தார்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சசிகுமார்..
அரசு பள்ளிக்கு உதவி செய்த அனைவருக்கும் விருது வழங்குவது நான் அவர்களுக்கு செய்யும் நன்றி என்றும் அரசுப் பள்ளியை நடத்துவதற்கு அரசை மட்டும் நம்பாமல் பொதுமக்களும் அரசு பள்ளிக்கு நிதி வழங்கி உதவ வேண்டும், ஒரு ஊருக்கு கோவில் அவசியம் என்பது போல் பள்ளியும் மிக மிக அவசியம் என தெரிவித்தார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகர் சசிகுமாரை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் வருகை தந்த நிலையில் அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள ரசிகர்கள் சூழ்ந்தனர்.