தூத்துக்குடி மாவட்டம் நாடார் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் என்கிற தம்பி ராஜா (60). பிரபல ரவுடியான இவர் மீது 8 கொலை வழக்குகள் உள்ளது. இதில் கடந்த 2016 ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் கோவையில் போலீசார் தேடிய போது தப்ப முயன்றதில் அவருக்கு இரண்டு கால்களும் முறிந்தது. இவர் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை ஆனைகுடியை சேர்ந்த ராக்கெட் ராஜாவின் கூட்டாளி ஆவார். தற்போது சென்னை அசோக் நகரில் வசிக்கும் இவர் பெங்களூரில் இருந்து போதைப்பொருள் வாங்கி அவ்வப்போது கோவையில் விற்பனை செய்த போது போலீசில் சிக்கி உள்ளார். இவரது பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவருக்கு போதை பொருள் சப்ளை செய்தது யார்? வேறு ஏதேனும் நோக்கத்துடன் கோவை வந்தாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். என்றும் தெரிவித்து உள்ளனர்.