புதுக்கோட்டை பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக மக்கள் தொகை தினம் 2024 உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா
தலைமையில் மாணவிகள், அரசு அலுவலர்கள்மற்றும்,பணியாளர்கள் இதில் பங்கேற்று உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். அப்போது குடும்ப நல வாசகங்கள் அடங்கிய மஞ்சள் பையை கலெக்டர் வெளியிட்டார்.இந்த நிகழ்ச்சியில்
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொ) ஜி. ஏ.ராஜ்மோகன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும்
ஊரகநலப்பணிகள்) சா.பிரியாதேன்மொழி, துணை இயக்குநர் கள் .அ.கோமதி
(மருத்துவம் மற்றும் குடும்பநலன்), எஸ். ராம்கணேஷ் (சுகாதார ப்பணிகள் ) (புதுக்கோட்டை) , எஸ்.நமச்சிவாயம் (சுகாதார பணிகள்) (அறந்தாங்கி) , மு.சங்கரி (காசநோய்) , மாவட்ட சித்தமருத்துவ அலுவலர் மு.வனஜா மற்றும் அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.