திருச்சி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் வருகின்ற 17.2.2023 அன்று உறையூர் நகர்நல மையத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களால் இக்கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1100-ம், ஊக்குவிப்பார்களுக்கு ரூ.200-ம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இச்சிகிச்சையானது ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல்வழங்கப்படுகிறது.
குடும்பநல கருத்தடை சிகிச்சை செய்யப்படும். சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில்
தங்கவேண்டிய அவசியமில்லை.சிகிச்சை முடிந்த பிறகு வீட்டிற்க்கு செல்லலாம்.
கத்தியின்றி ரத்தசேதமின்றி. செய்யப்படும் இக்கருத்தடை சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது.
எனவே விருப்பமுள்ள ஆண்கள் நவீன குடும்பநல கருத்தடை
செய்துகொண்டு பயன்பெறலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.