திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் வடக்கு மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி எல்லா குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூபாய் 1000 வழங்க வேண்டும்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரை கர்நாடக அரசு உடனே வழங்கி டெல்டா பகுதி விவசாயிகளை காத்திட தமிழக அரசு வலியுறுத்த வேண்டும், அதேபோல் நெய்வேலியில் என்எல்சி நிர்வாகம் விளை நிலங்களில்
உள்ள பயிர்களை அழிப்பதை கண்டித்தும் கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தொழிற்சங்க பேரவை திருப்பதி ,அவைத்தலைவர்கள் வி கே ஜெயராமன் ,அர்ஜுனன், முருகேசன் ,முருகேசன், பொருளாளர் மில்டன் குமார், ஆறுமுகம், வசந்த் பெரியசாமி துணை செயலாளர்கள் ப்ரீத்தா விஜய் ஆனந்த் ராஜ்குமார் பகுதி செயலாளர்கள் வெங்கடேசன், மோகன் அருள்ராஜ் ,மணிகண்டன் ,சாதிக் அலி செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் பெருமாள் காளியப்பன் ராமு ஐயப்பன் முல்லை சந்திரசேகர் மகளிர் அணி இந்துமதி உமா சுசீலா பிரியா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.