Skip to content
Home » தொழிலாளர் குடும்பங்களை விமானத்தில் பறக்க வைத்த கோவையின் கனவு மகன்….

தொழிலாளர் குடும்பங்களை விமானத்தில் பறக்க வைத்த கோவையின் கனவு மகன்….

  • by Senthil

கோவை பேரூர் பகுதியில் “பிரியா உணவு கேட்டரிங்” நடத்தி வரும் லட்சுமி ராஜனின் மகனான பிரகாஷ் தேவ் ராஜன் இவரது கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 26″க்கும் மேற்பட்ட தொழிலாளர் சொந்தங்களான பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விமானம் மூலம் “கேரள மாநிலம் கொச்சினிலிருந்து – சேலம் வரை பறக்க” வைத்து கேரளாவில் உள்ள ஆலப்புழா படகு சவாரியில் இரு நாட்கள் முழுக்க அவர்களின் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள வைத்து அவர்களின் மகிழ்ச்சியில் தனது கனவை நிறைவேற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்..!

தந்தை லட்சுமி ராஜனின் பேரூர் பகுதியில் அமைந்துள்ள பிரியா கேட்ரிங்கிள் பணிபுரியும் தொழிலாளர்கள் – தங்களின் முதலாளியான லட்சுமி ராஜனின் “ஆறு வயது சிறுவன் பிரகாஷ் தேவ் ராஜன்” பெரிதாகி உன்னுடைய கனவு என்ன என்றும் எங்களுக்கெல்லாம் செய்யப் போகிறார் என்று எதார்த்தமாக கேட்ட பொழுது – எனது கனவு

உங்களையெல்லாம் ஒரு நாள் விமானத்தில் நான் அழைத்துச் செல்வேன் என்று எதார்த்தமாக – ஆறு வயதில் கூறியதை சவாலாகவும் மற்றவர்களுடைய கனவை நினைவாக்கும் விதமாக சுமார் 35″ஆண்டுகளுக்குப் பிறகு தனது தொழிலாளர் சொந்தங்களான – தன்னுடைய தந்தை காலத்தில் பணிபுரிந்த சரோஜினி என்கின்ற 75″ வயது பெண்மணி உட்பட சுமார் 26″க்கும் மேற்பட்ட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விமானத்தில் பறக்க வைத்து அவர்களது அக்கனவை நிறைவேற்றியுள்ளார்..!

நாம் நினைப்பதையோ நாம் கனவு காண்பதையோ நடத்த முடியாமல் நாளோடு நாள் ஓடிக் கொண்டிருக்கும் தற்போதைய கால சூழ்நிலையில் – தனது தந்தை காலத்தில் இருந்து பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் கனவை நிறைவேற்றி தந்தைக்கு பெருமை சேர்த்தி அதில் மகிழ்வு அடைந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்..!

நம்முடன் இருப்பவரை நாம் நன்றாக பார்த்துக் கொண்டால் – நம்மை மேலிருப்பவன் பார்த்துக் கொள்வான் என்ற சொற்களுக்கு ஏற்றார் போல் – இத்தகைய விமான பயண கனவை நிறைவேற்றி தொழிலாளி மற்றும் முதலாளியின் இருவருக்குமான அன்பை வலுவடைய செய்துள்ளார் பிரகாஷ் தேவ் ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!