திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த இருனாப்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன்கள் சீனிவாசன் மற்றும் ஆனந்தன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.சீனிவாசனுக்கு சிலம்பரசி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு பெண் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளன.
மேலும் சீனிவாசன் குஜராத்தில் ரேடியாலஜி சேஃப்டி ஆபீஸராக பணிபுரிந்து வந்த நிலையில் பத்து நாள் விடுமுறையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் மனமுடைந்த மனைவி சிலம்பரசி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் இதனை அறிந்த சிலம்பரசியின் தாயார் விஜயா இந்த சம்பவம் குறித்து குருசிலப்பட்டு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சீனிவாசன் மற்றும் அவருடைய உறவினர்கள் 8 பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிலம்பரசியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சீனிவாசனின் தம்பியான ஆனந்தன் மனைவி ஜீவிதாவிற்கும், சீனிவாசனுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததால் அவ்வப்போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது இதன் காரணமாக சிலம்பரசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

