Skip to content

குடும்பதகராறு…. மூதாட்டியை 15 இடத்தில் கத்தியால் குத்திய… பட்டதாரி வாலிபர் கைது..

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவல் சரகம், சேந்தங்குடி மதுரா நகர், நியூ டெலிகாம் நகர் பகுதியை சேர்ந்தவர் சேது மாதவன் (65) தனது மனைவி நிர்மலா (61) என்பவருடன் வசித்து வருகிறார். சேது மாதவன் குடும்பத்திற்கும் அவரது வீட்டிற்கு எதிரே வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் குடும்பத்திற்கும் ஏற்படும் சிறு பிரச்சனைகளின் காரணமாக பேச்சுவார்த்தை இன்றி இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று 06.03.2025 ம் தேதி காலை 06.30 மணியளவில் சேது மாதவனின் மனைவி நிர்மலா அவரது வீட்டு வாசலில் கோலமிட சென்ற போது ராஜேந்திரனின் மகன் பிரேம் (22) என்பவர் நிர்மலா என்பவரிடம் வீண் தகறாறு செய்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டும் மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் நிர்மலாவை பிரேம் சரா மாறியாக குத்தியுள்ளார். 15 இடங்களில் குத்தியுள்ளார். இதனை தடுக்க

(கத்தியால் குத்திய நபர்)

சென்ற அவரது கணவர் சேது மாதவன் என்பவரை தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளார். இதில் காயம்பட்ட இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தஞ்சாவூர் காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பிரேமை மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை முயற்சி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு பிரேமை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல்நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து வருகிறார். மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வை செய்து வருகிறார் என்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரேமை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டும் காட்சிகளும் பதிலுக்கு பிரேம் கல்லால் தாக்கும் காட்சிகளும் பதிவிடப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!