மயிலாடுதுறை அருகே ஆண்டாஞ் சேரி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மகள் லாவண்யா (18).
இவர் பெரம்பூர் கடைவீதியில் உள்ள பாலமுருகனது அடகு கடையில் 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
அடகு கடையில் பணத்தை திருடியதாக கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
கடை உரிமையாளர் தகாத முறையில் நடந்து கொள்கிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கால் கண்காணிப்பாளரிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாமல் அடகு கடை காரருக்கு சாதகமாக பெரம்பூர் இன்ஸ்பெக்டர் நடந்து கொண்டதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நேற்று இரவு பெரம்பூர் கடைவீதியில் சாலை மறியல் நடத்தினர். அதன் பிறகு போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் லாவண்யாவை போலீசார் விடுவித்த பிறகு கலைந்து சென்றனர் . கடைக்காரர் மீதும் பொய் வழக்கு போட்ட காவல்துறை ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.