மலேசியாவிலிருந்து நேற்று திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது .அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெரம்பலுார் மாவட்டம் ரோஸ் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்( 44 ) என்பவர் பாஸ்போர்ட்டை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து
இமிகேரசன் அதிகாரிகள் முத்துகிருஷ்ணனை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து முத்துக்கிருஷ்ணனை கைது செய்தனர்.
