மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகள் மற்றும் ஆவணங்களை இமிகிரேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ராமநாதபுரம் பட்டினம் காத்தான் கிருஷ்ணா நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த கண்ணன்
(41) என்பவர் தனது பெயர் மற்றும் முகவரியை மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்று அதன் மூலமாக இங்கு வந்தது தெரிய வந்தது .அதை தொடர்ந்து இம்மிகிரேஷன் அதிகாரிகள் கண்ணனை ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.