Skip to content
Home » போலி ஆவணங்கள் கொடுத்து விவசாய கடன் பெற முயற்சி.. திருச்சியில் 2 பேர் கைது

போலி ஆவணங்கள் கொடுத்து விவசாய கடன் பெற முயற்சி.. திருச்சியில் 2 பேர் கைது

  • by Senthil

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அல்லூரைச் சேர்ந்த பிரகாஷ்(60) மற்றும் அதேப்பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (45) ஆகியோர் விவசாய கடனுக்காக சிட்டா நகல்களை கொடுத்துள்ளனர். சம்மந்தப்பட்டவர்கள் கொடுத்த சிட்டா ஆவணங்கள் சரியானவையா? என விஏஓ நடத்த விசாரணையில் ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் பரமேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷ் மற்றும் புவனேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!