திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் முறையான மருத்துவம் படிக்காமலே போலி மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணைய இயக்குனர் ஞான மீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் அரசு மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் அப்பகுதியில் சோதனையில் மேற்கொண்டனர். அப்போது கவுண்டப்பனூர் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் மகன் ராமச்சந்திரன் (55)என்பவர் முறையான மருத்துவம் படிக்காமல் DIPLOMA IN SIDDHA
மட்டுமே படித்துவிட்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று போலி மருத்துவம் பார்த்து கொண்டு இருந்த ராமச்சந்திரனை பிடித்தனர். மேலும் தலைமை மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதனையடுத்து க்ளினிக்கு பூட்டு போட்டு சுமார் 5000ரூபாய் மருந்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.