மருத்துவச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சுப்பையா பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதிலும் வழங்கப்பட்டுள்ள போலி சித்த மருத்துவ சான்றிதழ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார் நேற்று மாலை சுப்பையா பாண்டியனை திருச்சியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். பின்னர் அவரை கடலூருக்கு அழைத்து சென்ற சிபிசிஐடி போலீசார் தொடரந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி சான்றிதழ் வழக்கில் முக்கிய நபரான கவுதமன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் அருகே போலி சான்றிதழ்கள் கண்டெடுத்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். சுப்பையா திமுக பிரமுகர் என்பது குறிப்பிடதக்கது.
போலிசான்றிதழ் விவகாரம்.. திருச்சி சித்த மருத்துவர் சுப்பையா கைது…
- by Authour
