விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதில் ஏற்கனவே 13 பேர் உயிரிழந்த நிலையில் இன்று காலை மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. எக்கியார் குப்பத்தில் கள்ளச் சாராயம் குடித்த பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளநிலையில், தற்போது கிளியனூர் பகுதியில் நடந்துள்ள சம்பவத்தால் அதிர்ச்சி நிலவுகிறது. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இதுவரை கள்ளச்சாராயத்தால் மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
