மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் கடந்த நம்பவர் மாதம் 20ம் தேதி நடந்தது. 23ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 230 இடங்களை பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி கைப்பற்றியது. பாஜக 132 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன . ஆனாலும் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் பதவி ஏற்பதிலும் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.
“மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் அவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்
சிவ சேனாவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவராக அஜித் பவாரும் அந்தந்த கட்சிகளின் எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் தொடர்பான தகவல் இதுவரை வரவில்லை என்று பாஜக எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர். எனினும், இன்று அல்லது நாளை அதற்கான கூட்டம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பதவியேற்பு விழா வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. பதவியேற்பு விழா மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.