அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் ஒன்றியம், கங்கைகொண்டசோழபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டிடம் ரூபாய் 22.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிட கட்டுமான பணியையும்,
தா.பழூர் ஒன்றியம், காரைக்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டிடம் ரூபாய் 22.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிட கட்டுமான பணி, ஆகிய பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசி, பொறியாளர் ஜெயந்தி, ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.மணிமாறன்,தலைமை ஆசிரியர்கள் க.மதிவாணன் (கங்கைகொண்டசோழபுரம்),கலியபெருமாள்(காரைக்குறிச்சி), ஒன்றியக்குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை,
ஊராட்சி மன்ற தலைவர்கள் சரஸ்வதி முத்துக்கிருஷ்ணன் (கங்கைகொண்டசோழபுரம்), கவிதா விஜயகுமார் (காரைக்குறிச்சி), காரைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் இரா.மணிமாறன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.ராமதுரை, ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ், பொருளாளர் த.நாகராஜன்,துணை செயலாளர் அ.ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி கோவி.சீனிவாசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ந.கார்த்திகைகுமரன் மற்றும் அரசு அலுவலர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.