திருச்சி மாவட்டம் லால்குடி மேல வாளாடி பெரியார் தெருவை சேர்ந்தவர் மருதை .இவரது மகன் அலெக்சாண்டர் (40). இவர் திருவரங்கம் முருகன் கோவில் அருகே வடக்கு வாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் கத்தி முனையில் மிரட்டி இவரிடம் பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அலெக்சாண்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.இது தொடர்பாக திருவானைக்காவல் பாரதி தெருவை சேர்ந்த ரங்கநாதன் (24) ,மேலே கொண்டையம்பேட்டையை சேர்ந்த சச்சிதானந்தம் (24) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பணம் ,கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.