கரூரில் ஜவுளி ஏற்றுமதி அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூரில் வரும் 24ம் தேதி மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்துள்ளார்.அனைவரும் கலந்து கொள்ளும்படியும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
தொழில் முனைவோர்களின் தோழர், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் @Udhaystalin ஆசிகளுடன், கரூர் மாவட்ட CII மற்றும் YI முன்னெடுப்பில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 73 சங்கங்கள் இணைந்து, 2030 ஆண்டுக்குள் கரூர் மாவட்டத்தின் ஏற்றுமதியின் மொத்த விற்றுமுதல் ரூபாய் 50,000 கோடியை தொடும் வகையில்,
‘KARUR VISION 2030 COLLABORATING TO ACHIVE THE BEYOND 50K’ என்ற இலக்கை நோக்கிய நகர்வுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வருகின்ற நவம்பர் 24 அன்று கரூரில் மாபெரும் மராத்தான் போட்டி நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளஅன்புடன் அழைக்கிறேன்..
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.