திருப்பதி கோயிலில் அறங்காவலர் குழு நிர்வாக அதிகாரியாக இருப்பவர் தர்மா ரெட்டி.இவரது மகன் சந்திர மௌலி ரெட்டி(28) க்கு அடுத்த மாதம் 26ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சந்திர மௌலி ரெட்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.30 மணியளவில் சந்திர மௌலி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவரது மரண செய்தி ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.