கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியில் இன்று தனியார் ஜிம் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் இந்திய பாடி பில்டரும் மற்றும் 44 நாடுகள் பங்கேற்ற ஆணழகன் போட்டியில் பங்கேற்று MR. Word பட்டம் வென்றவர் இன்று நடைபெற்ற ஜிம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உடன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையினை திறந்து வைத்தார் பின்னர் கடையினை பார்வையிட்டார், இந்திய பாடி பில்டர் ராஜேந்திரன் மணியை காண ஏராளமான பொதுமக்கள் வருகை தந்தனர் பின்னர் அவருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் செய்திகளை சந்தித்த ராஜேந்திரன் மணி கூறுகையில்: பலர் தவறான பாதையில் சென்று வருகின்றனர் அதனை தவிர்த்து உடற்பயிற்சியினை சிறு வயதில் இருந்தே செய்தால் ஆரோக்கியமாக இருக்கும், நோயற்ற வாழ்வு ஆரோக்கியமாக எதிர்காலத்திற்கு கொண்டு செல்லும்
அனைவரும் ஆரோக்கியமான இருப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியம் சென்னையில் இருப்பது போலவே கரூரில் உடற்பயிற்சி நிலையம் உள்ளது.
பலர் மதுப்பழக்கம், போதை வஸ்திரங்கள், மன அழுத்தம், அவற்றில் இருந்து விடுபட அனைவரும் உடற்பயிற்சி மேற்கொண்டால் அதிலிருந்து விடுபடலாம், அப்போதுதான் தன்னம்பிக்கை வரும் நோயற்ற வாழ்விற்கு மிகவும் அவசியமானது உடற்பயிற்சி மட்டும்தான் எனக் கூறினார்.