போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளை தயார்படுத்த, நாகையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் ஜனவரி 5, ம் தேதி தமிழக அரசால் திறக்கப்பட்டது. அறிவை வளர்க்கும் ஆயுத மையத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில், அங்கு கம்ப்யூட்டர்கள் மற்றும் பல்வேறு புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போட்டித் தேர்வில் பங்கேற்க உள்ள மாணவ மாணவிகளுடன் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுசார் மையத்தில் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள்
மத்தியில் பேசிய ஆட்சியர், அறிவை தீட்டிக் கொள்ளவும், போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால், மாணவ ,மாணவிகள் கட்டாயம் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளையும் சரளமாக தெரிந்து
வைத்திருக்க வேண்டும் என்றும் மும்மொழிகளிலும் கை தேர்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே போட்டித் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்றும் கூறினார். ஆகையால் போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள், நன்றாக பயின்று தைரியத்துடனும் அதனை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் எனவும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.