தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு இன்று நடத்தியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்தேர்வினை 2,262 நபர்கள் எழுத விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வுகள், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்பட எட்டு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
8 தலைமைக் கண்காணிப்பாளர்களும், 3 இயக்கக்குழு அலுவலர்களும், 8 ஆய்வு அலுவலர்களும் 2 பறக்கும் படை குழுக்களும் 9 வீடியோகிராபர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தேர்வில் 677 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை 1585 தேர்வுகள் தேர்வு எழுதுகின்றனர்.
மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தேர்வர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.