ஹரியானா மாநிலம் நாராயண்கர் பகுதியில், 2 ஏக்கர் நிலத்துக்காக ஏற்பட்ட பிரச்னையில், சகோதரன் ஹரிஷ் ( 35), அவரது மனைவி சோனியா (32), தனது தாய் சரோபி (65), சகோதரரின் ஐந்து வயது மகள் மற்றும் ஆறு மாத மகன் உட்பட 5 பேரையும் நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்த முன்னாள் ராணுவ வீரர் பூஷன் கத்தியால் கோடாரியால் வெட்டிக்கொலை செய்துள்ளார். காயமடைந்த தந்தை ஓம் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொன்ற முன்னாள் ராணுவ வீரர் பூஷனை போலீசார் இன்று கைது செய்தனர். 2 ஏக்கர் நிலத்துக்காக தனது தாய், சகோதரன், அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரை முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சொத்துக்காக தாய் உள்பட 5 பேரை கொன்ற மாஜி ராணுவர் வீரர் கைது..
- by Authour
