Skip to content

புதுக்கோட்டையில் முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவ முகாம்

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி, பழைய அரசு மருத்துவமனையில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும்  அவர்களை  சார்ந்தோர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  இன்று (26.03.2025) துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

பின்னர்  கலெக்டர் அருணா கூறியதாவது:

முன்னாள் படைவீரர்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ்ந்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை  முதல்வர் அவர்ள்  செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரர்களுக்கு, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், குறைதீர்க்கும் கூட்டம் நடத்துதல், சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் வழங்குதல், தொழில்புரிவதற்கான பயிற்சிகள் நடத்துதல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்றையதினம் நடைபெற்றது.

இம்முாகமில், பொதுமருத்துவம், கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் பரிசோதனை, நீரிழிவு நோய் கண்டறிதல், பல் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசோதனைகளானது, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு,  நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

முன்னாள் படைவீரர்களின் நலன் காத்திடும் வகையில் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முகாம்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) டாக்டர் .ஸ்ரீபிரியா தேன்மொழி, உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) கேப்டன்.சீ.விஜயகுமார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.மு.வனஜா, புதுக்கோட்டை வட்டாட்சியர் மு.செந்தில்நாயகி, கண்காணிப்பாளர் டி.இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

error: Content is protected !!