Skip to content
Home » 25ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்…. வீராங்கனைக்கு போலீஸ் அதிகாரி வாழ்த்து

25ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்…. வீராங்கனைக்கு போலீஸ் அதிகாரி வாழ்த்து

  • by Authour

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேசிய மலையேறும் வீராங்கனை ஆஷா மால்வியா, நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு, அதிகாரம், முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த சைக்கிள் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

கடந்த நவம்பர் 1-ந்தேதி போபாலில் தனது பயணத்தை தொடங்கிய ஆஷா மால்வியா, மத்திய பிரததேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, கேரளா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து 7-வது மாநிலமாக தமிழ்நாட்டில் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று ஆஷா மால்வியா தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது காந்தி தொடர்பான புத்தகத்தை ஆஷா மால்வியாவிற்கு முதல்-அமைச்சர் பரிசளித்தார். அதைத்தொடர்ந்து ஆஷா மால்வியா சென்னை தாம்பரம் முன்னாள் போலீஸ் கமிஷனர் ரவியை சந்தித்தார். ரவியும், மால்வியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக ரவி கூறும்போது,  பெண்களின் அதிகாரம், பாதுகாப்பு போன்றவற்றை வலியுறுத்தியும், அது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவும் மால்வியா சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். வீராங்கனையான மால்வியா தனது  லட்சியத்தில் வெற்றி பெறுவார். அவருக்கு வாழ்த்துக்கள்  என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *