நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் பி. ஆர். சுந்தரம். இவர் இவர் ராசிபுரம் தொகுதி(1996-2001) அதிமுக எம்.எல்.ஏவாகவும், பின்னர் 2014ம் ஆண்டு நாமக்கல் தொகுதி எம்.பியாகவும் வெற்றி பெற்றவர். கடந்த 2021ம் ஆண்டு இவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். அவர் திமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக பணியாற்றினார்.
74 வயதான பி ஆர் சுந்தரம் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ராசிபுரத்தில் காலமானார்.