வேலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஞானசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் 2006 -2011 காலகட்டத்தில் வருமானத்துக்கு மீறி ரூ.3.15 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் ஞானசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து இன்று உத்தரவிட்டது.