காங்கிரஸ் எம்.எல்.எ. விஜயதரணி பாஜகவில் இணைந்தார். இன்னும் சிலர் ஒருசில தினங்களில் பாஜகவில் இணைவார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பாஜகவில் சேருகிறார் என செய்தி வெளியானது. ஏற்கனவே ஆரம்ப காலத்தில் மாபா பாண்டியராஜன் பாஜகவில் இருந்தவர் என்பதால் மீண்டும் அவர் தாய் வீட்டுக்கே செல்லலாம் என்ற செய்தி வேகமாக பரவியல்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தனது எக்ஸ் தளத்தில் 3 வருடங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட “என் இறுதி மூச்சு உள்ளவரை அ.இ.அ.தி.மு.க. மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன் என்பதை தெளிவு படுத்துகிறேன்” என்ற பதிவை பகிர்ந்து, “என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன்! உண்மையுடன்!” என்று தெரிவித்து உள்ளார்.