முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை தமிழ்நாட்டில் நடக்கி்றது. கேரளாவில் 2ம் கட்டத் தேர்தல்( ஏப்26) தான் நடக்கிறது. எனவே இன்று கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. கேரள மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், ஒரு முறை பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. ஒன்றல்ல, இரண்டல்ல, 4 இயந்திரங்களில் இந்த கோளாறு கண்டறியப்பட்டுள்ளதாகவும், மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள காங்கிரஸின் கைச்சின்னம் மற்ற சின்னங்களை விட சிறியதாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடனடியாக அதை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உடனடியாக இது குறித்து எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் புகார் செய்தன. அதன்பேரில் உச்சநீதிமன்றம், நேர்மையான தேர்தல் நடைபெற தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்த சம்பவம் குறித்து கேரளா காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூறும்போது, பாஜக வெற்றி பெற முடியாது என தெரிந்து விடிட்டததால் அவர்கள் இந்த வேலையை தொடங்கி உள்ளனர் இது கண்டிக்கத்தக்கது. என்று கூறி உள்ளார்.