ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை அண்ணா அறிவாலயம் சென்று முதல்வரை சந்தித்து ஆதரவு கேட்டார். பின்னர் மதிமுக அலுவலகம் சென்று வைகோவை சந்தித்து ஆதரவு கேட்டார். அதைத்தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம அலுவலகம் சென்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்டார்.
பின்னர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:அதிமுக இரண்டாக உடையவில்லை. 4 ஆக உடைந்து உள்ளது. கமல்ஹாசனின் மநீம கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 11 ஆயிரம் வாக்குகள் பெற்றது. அது சாதாரணமானது அல்ல.கமல்ஹாசன் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர். எனவே அவர் எங்களை ஆதரிப்பார் என நம்புகிறேன். அவர் தங்கள் கட்சி நிர்வாகிகளோடு கலந்து பேசி முடிவு அறிவிப்பதாக கூறி உள்ளார். நிச்சயம் எங்களை ஆதரிப்பார். ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.