ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோகமாக வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் இன்று சென்னை வந்தார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். இளங்கோவன் வரும் 10ம் தேதி தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் எம்.எல்.ஏவாக பதவி ஏற்கிறார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.