ஈரோட்டில் தமிழக நகரப்பற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் … ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் விளக்கி வாக்கு சேகரிப்போம். திமுக தலைவர் ஸ்டாலினும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இங்கு நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வார்கள். பொதுக்கூட்டங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். நேரடியாக மக்களைச் சந்திப்பதுதான் அதிகமாக இருக்கும். பிப்ரவரி 3-ம் தேதி பகல் 12 மணிக்குப் பிறகு, வேட்புமனுத்தாக்கல் செய்ய நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிப்ரவரி 1-ம் தேதி அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களின் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் மக்களின் வரவேற்பு சிறப்பாக உள்ளது. திமுகவிற்கு வாக்களிப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.” என்று கூறினார்.
