95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. டேனியல் கிவான் (Daniel Kwan) மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Scheinert) இயக்கத்தில் வெளியான ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All At Once) என்ற ஆங்கில திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக மிஷெல் யோஹ் (Michelle Yeoh) வென்றார்.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தி வேல்ஸ் (The Whale) திரைப்படத்திற்காக பிரெண்டன் பிரசர் (Brendan Fraser) வென்றார்.