சென்னையில் மழை புரட்டி எடுத்த போதும் கூட மின்சாரம் இடைவிடாமல் வழங்கப்பட்டது. சில இடங்களில் 1-2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. ஆனா ல் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடை இன்றி வழங்கப்பட்டது. சென்னையில் பொதுவாக லேசாக மழை பெய்தாலே மின்சாரம் தடை ஆகும். ஆனால் கடந்த 2 நாட்களாக கனமழைக்கு இடையிலும் கூட மின்சாரம் தடை இன்றி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மின்சார வாரியமும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் முறையாக வகுத்த சில திட்டங்கள்தான் இதற்கு முக்கிய காரணம். அவை என்னென்ன திட்டங்கள் என்று பார்க்கலாம்.
1.வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடந்த 1 மாதமாகவே. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பராமரிப்பு பணிகள் எல்லாம் செய்யப்பட்டு தயாராகவைக்கப்பட்டு இருந்தன.
2. செந்தில் பாலாஜி அமைச்சரான 3 வருடங்களுக்கு முன்பே சாலை ஓரம் உள்ள மின்சார பாக்ஸ்களை உயரப்படுத்த சொன்னார் பாக்ஸ்கள் அனைத்தும் உயரமான இடத்தில் சிமெண்ட் தளம் மூலம் மாற்றப்பட்டது.
3. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கினாலும் மின்சார தடை இருக்காது.
4. மின்சார உதவி மையம் 24*7 சிறப்பாக செயல்பட்டு மின் தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்பட்டது. வந்த புகார்களும் உடனடியாக கவனிக்கப்பட்டன.
5. மின்சார ஊழியர்கள் தங்கள் ஏரியாக்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
இதனால் மின் தடை குறித்து உடனே அறியப்பட்டு அவை சரி செய்யப்பட்டது.
6. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளிடம் பணியை விடாமல் நேரடியாக பணிகளை கண்காணித்தார் கடந்த ஒரு வாரமாகவே இந்த மழைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
எப்படி தப்பித்தது?: சென்னைக்கு வந்த பிரச்சனை பாதியில் வெளியேறி உள்ளது. இதற்கு காரணம். காற்றழுத்த தாழ்வு மையம் கிழக்கு பக்கமாக புதுச்சேரியில் இருந்தது. அங்கிருந்து வட மேற்கு திசையில் நகர தொடங்கி உள்ளது. 10 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர தொடங்கி உள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி. மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இது தொடர்ந்து வடக்கு திசையில் நகரும். இப்படி நகர நகர. மேகங்கள் ஆந்திர பிரதேசம் நோக்கி நகரும் ஆந்திர பிரதேசம் நோக்கி மேகங்கள் செல்லும் பட்சத்தில் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்காது.