ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி, சுண்டப்பூர் மலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் அந்தோணி ஜெரால்ட் (49). நேற்று மதியம் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டு இருந்த போது, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துள்ளார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த ஆசிரியர்கள், கார் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மலைக்கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளின் கல்விக்காக ஆசிரியர் பணியேற்று, உழைத்த அந்தோணி ஜெரால்ட், வகுப்பறையிலேயே, தன் கடைசி மூச்சையும் இழந்துள்ளார். அவரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், குடும்பத்தினருக்கும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரின் ஆசிரியர் பணியால் பல அறிஞர்கள் தோன்றுவார்கள். அவரின் நினைவைப் போற்றுவார்கள்,’ என்று அவர் கூறியுள்ளார்.
.