ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று ஈரோடு செசன்ஸ் கோர்ட்டில் இன்று சீமான் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி, வரும் அக்டோபர் 10ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்குகளுக்காக நாம் தமிழர் கட்சி பேசாது. நாட்டுக்காகத்தான் பேசும். நான் உண்மையைத்தான் பேசுவேன். ஓட்டுக்காக நிற்காமல், நாட்டுக்காக நிற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.