ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதி விட்டு வெளியேறி ரோட்டை கடந்து தண்ணீர் உள்ள குட்டைகளுக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் சத்தியமங்கலம் – பண்ணாரி ரோட்டில் புதுக்குய்யனூர் என்ற இடத்தில் யானைகள் கூட்டமாக குட்டியோடு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. அப்போது அந்த வழியாக வந்த பஸ் டிரைவர் யானைகள் கூட்டமாக சாலையை கடந்து செல்வதை பார்த்து பஸ்சை நிறுத்தி கொண்டார். யானைகள் ஒன்றபின் ஒன்றாக வரிசையாக சாலையை கடந்து செல்வதை கண்ட பயணிகள் பார்த்து ரசித்தனர். யானைகள் வனப்பகுதிக்குள் சென்றபின் டிரைவர் பஸ்சை அங்கிருந்து லாவகமாக ஓட்டி சென்றார். இந்த காட்சிகள் அனைத்தையும் பஸ்சில் இருந்த பயணி ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
