திருச்சி, ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை ஈரோடு சென்ற ஈரோடு ஸ்பெஷல் விரைவு ரயில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இதனால் எதிர் திசையில் வந்த எர்ணாகுளம் விரைவு ரயில் முத்தரசநல்லூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த தாமதத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஈரோடு விரைவு ரயில் இன்ஜின் கோளாறு…திருச்சி ரயில்கள் 1 மணி நேரம் தாமதம்… பயணிகள் அவதி
- by Authour
