தமிழ்நாட்டில் இன்று ஈரோட்டில் மிக அதிகமாக 107.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இது தவிர திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, திருத்தணி, கரூர் பரமத்தி, சேலம் ஆகிய நகரங்களிலும் 104 டிகிரி வரை வெப்பம் பதிவானது. வரும் மே 2, மற்றும் 3ம் தேதிகளில் தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும். அப்போது இயல்பை விட 3 முதல் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.