Skip to content
Home » ஈரோடு இடைத்தேர்தல்…. 5 மணி வரை 70.58 % வாக்குபதிவு…

ஈரோடு இடைத்தேர்தல்…. 5 மணி வரை 70.58 % வாக்குபதிவு…

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 7 மணி முதல் 11 மணிவரை 4 மணிநேரத்தில் 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 4 மணி நேரத்தில்  63,469 பேர் வாக்களித்துள்ளனர்.

காலை 7 மணி முதல் 9 மணிவரையிலான 2 மணி நேரத்தில் 10.10% வாக்குகள்(22,973 பேர்) பதிவான நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் 17.79 % வாக்குகள் பதிவாகி உள்ளன.

மதியம் 1 மணி வரை, அதாவது 6 மணி நேரத்தில் 44.56% வாக்குப்பதிவு ஆகி உள்ளது. 1லட்சத்து ஆயிரத்து 392 பேர் வாக்களித்து உள்ளனர். இதில் ஆண்கள் 51ஆயிரம் பேர் வாக்களித்துஇருந்தனர்.

பிற்பகல் 3 மணி வரை 59.22% வாக்குகள் பதிவாகி உள்ளது.3 மணி வரை  1 லட்சத்து 34ஆயிரத்து 758 பேர் வாக்களித்து உள்ளனர்.

இதில் பெண்கள் 69,400 பேரும், ஆண்கள் 65,350 பேரும் வாக்களித்து உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 8 பேரும் வாக்களித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 5 மணி நிலவரப்படி 70.58 % வாக்களித்துள்ளனர். வாக்குசாவடியில் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் இதுவரை 1.60 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!