*ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடியின் பேச்சுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.
வேஷ்டி கட்டுறியா? மீசை இருக்கா? ஆம்பளையா என்கிறார். ஆண்மையின் திமிர் அழிய வேண்டும்என்று சொன்ன
பெரியாரின் மண்ணில் நின்று கொண்டு, ஆம்பளையா பொம்பளையா என்று கேட்கிறார்..
பல ஆண்டுகளாக ஒரு அம்மையாரின் காலில் விழுந்து எழுந்திருக்கிறார், அவர்கள் என்ன மீசை வைத்திருந்தார்களா? அல்லது வேஷ்டி கட்டியிருந்தார்களா?பதவி என்று சொன்னவுடன் ஒரு அம்மையாரின் காலில் விழுந்தார். பின்னர் அவர்களின் முதுகிலேயே குத்தினார்.!
இதுதான் ஆண்மையா? என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பினார்.