Skip to content

ஈரோடு கிழக்கு பிரசாரம் மாலை 6 மணியுடன் முடிகிறது..

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதியில்  நாளை மறுநாள்(புதன்)   இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன்  காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் மூன்று பேரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. எட்டு பேரின் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 47 பேர் களத்தில் இருந்த நிலையில், அதில் பத்மாவதி என்பவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வேட்பு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

தற்போது திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, தவிர நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், 33 சுயேச்சைகளும் களத்தில் இருக்கின்றனர்.

திமுக, நாம் தமிழர் கட்சிகள் பிரசாரத்தில்  ஈடுபட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி , உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மீது அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.  திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் முத்துசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. ஆறு மணிக்கு மேல் நேரடியாகவோ மறைமுகமாகவோ சமூக வலைதளங்கள் மூலமோ வாக்கு சேகரிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் வெளியூர்களைச் சேர்ந்த நபர்கள் 6 மணிக்கு மேல் தொகுதியில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது . எனவே இன்று காலை முதல்  திமுக வேட்பாளர் வீதி வீதியாக  சென்று வாக்குசேகரித்து வருகிறார்.

error: Content is protected !!