ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. எனவே இன்று முதல் 6 மாதத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.