ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இன்று முதல் வரும் 26 ம் தேதி வரை விருப்ப மனு பெறப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிமுக அலுவலகத்தில் விண்ணப்பக்கட்டணமாக ரூ. 15 ஆயிரம் செலுத்தி விருப்ப மனு அளிக்கலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.