தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் இந்தியா கூட்டணி வசமாகும். இந்தியா கூட்டணியில் தான் திமுகவும் இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அதற்கான இலக்கு நிர்ணயித்து பணியாற்றுகிறோம். ஈரோடு கள ஆய்வு இந்த நம்பிக்கையை தந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது. ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும். ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை, அவர் சட்டப்படி சந்திப்பார்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.